பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 亡霆3

ஜோசப் பிரீஸ்ட்டிலி, சோடா பான வகைகளைக்

கண்டுபிடித்ததற்காக, அவரை விஞ்ஞான உலகம் இன்றும் வியந்து பாராட்டுகின்றது.

சாராயக் கலவையிலே இருந்து வீசிய துர்நாற்றத்தை அவர் ஊன்றி நோக்கி, அதைத் துருவி ஆராய்ந்து கண்டு பிடித்த கார்பன் - டை ஆக்சைட்டிலே இருந்து, மீண்டும் ஒரு சிக்கலை அவர் கண்டார்.

அந்த சிக்கலை அவர் ஆராய்ந்ததால், ஃப்லோ ஜிஸ்ட்டான் என்ற உயிர் வாயுவை, அதாவது ஆக்ஸிஜனைக் கண்டுபிடித்தார்.

ஜோசப் பிரீஸ்ட்டிலி கி.பி.1804 -ஆம் ஆண்டு அமெரிக்காவில் காலமானார்.

அவரது விஞ்ஞானச் சிக்கல்களால் விளைந்த கண்டுபிடிப்புகள் இன்றும் மக்களிடையே நடமாடி வருகின்றன.

அந்த மாமேதையின் இறுதிச் சடங்கிலே அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புகளைப் பாராட்டி பெஞ்சமின் ஃப்ராங்கிலின் என்ற மாபெரும் விஞ்ஞானியும், தாமஸ் ஜெபர்சன், ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளும் தங்களது இறுதிக் கண்ணிரைச் செலுத்தி ஆறாத் துயருறறனா.