பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼巢2蟹 விஞ்ஞானச் சிக்கல்கள்

அந்த வெற்றி என்ன தெரியுமா? சாராயக் கலவைத் தொட்டியின் காற்றிலே எரியும் மரச் சுள்ளியைப் பிடித்தபோது அணைந்து விட்டது அல்லவா? அந்த நிலைத்த காற்றை அவர் விடாமல் தொடர்ந்து ஆராய்ந்ததால் அவர் வெற்றி பெற்றார். அந்தக் காற்றுதான்், இன்று நாம் விஞ்ஞான உலகத்தில் பெயரிட்டு அழைக்கும் கார்பன்-டை ஆக்சைட், என்ற காற்றாகும்.

அக் காற்று, நீரில் கரையும் என்பதைக் கண்டு பிடித்து அதைக் கரைத்தும் காட்டி அவர் வெற்றி பெற்றார்.

அவ்வாறு கரைந்த காற்றால், இன்று நாம் ஐஸ்கிரீம், சோடா, கொக்கோ கோலா, ஜிஞ்சர் ஏல், சோடா போன்ற பானங்களைச் செய்து பருகி வருகிறோம்.

இன்றைக்கு அந்த பானங்கள், மனித இனத்தின் உடல் நலத்துக்காக எத்தனையோ வகைகளில் பயன்படுவதை அனுபவித்து வருகிறோம்.

இந்த விஞ்ஞான விந்தையைச் சாராயக் கலவையிலே, இருந்து கண்டுபிடித்ததற்காக, அந்த மதகுருவுக்கு இங்கிலாந்து அரசு ஒரு தங்கப் பதக்கத்தைப் பரிசாகத் தந்து பாராட்டியது.

தங்கப் பதக்கத்தைப் பெற்ற அந்த அறிவியல் மேதை யார் தெரியுமா?

இங்கிலாந்து நாட்டிலே உள்ள லிட்ஸ் நகரில் கி.பி. 1773 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 - ஆம் நாள் பிறந்த விஞ் ஞான வித்தகர் ஜோசப் பிரீஸ்ட்டிலி என்பவராவார்.