பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

... புலவர் என்.வி. கலைமணி 鲁慧篡 அந்த கலகக்காரர்கள் கூட்டம் ஒரு நாள் திடீ ரென்று மத குரு வீட்டையும் முற்றுகை இட்டது.

'சாராய மத குரு ஒழிக’ என்ற எதிர்ப்புக் குரலைக் கொடுத்தபடியே அவரது வீட்டை நெருப்பிட்டுக் கொளுத்தி விட்டது.

எரிந்தது விடு! சர்ம்பலாயின. அவரது வீட்டுச் சமான்கள் எல்லாம்! சாராயப் புட்டிகளை எல்லாம் அந்த கூட்டத்தினர் உடைத்து எறிந்தார்கள்.

அவரது நூல் நிலையத்திலே இருந்த எல்லாப் புத்தகங்களையும் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

சோதனைச் சாலையிலே இருந்த கருவிகளையும் - குறிப்பேடுகளையும் ஒன்றைக்கூட விடாமல் அழித்தார்கள்!

அவர் எழுதி வைத்திருந்த கையேட்டுக் குறிப்புக்களை எல்லாம் சுக்கு நூறாகக் கிழித்து, வழி நெடுக வீசியபடியே கலகக்காரர்கள் சென்றார்கள். இந்த சம்பவங்கள் புரட்சியின் போது அடிக்கடி நடக்குமென்பதை அறிந்த மதகுரு, குடும்பத்துடன் தப்பி வேறு ஒர் இடத்திற்கே ஒடி விட்டார்.

தனது சோதனைச் சாலையும் - விஞ்ஞான குறிப்பேடுகளும் அழிந்ததைக் கண்ட, அந்த அறி வியல் ஞானி, அழுது புலம்பினார், கண்ணிர் விட்டார், கதறினார்.

இவ்வளவு கடுமையானத் தாக்குதலுக்குப் பிறகும் கூட, அந்த மதகுரு தனது சாராய ஆராய்ச்சியை விடாமல், தளராமல் உழைத்தார்.

இறுதியிலே தனது அயரா உழைப்பின் மூலமாக, அவர் ஒரு நாள் தனது சோதனையிலே திடீரென்று வெற்றி பெற்றார்.