பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈靈盤畫 விஞ்ஞானச் சிக்கல்கள்

'சாராயமாம், ஆராய்ச்சியாம்! மதகுரு வெட்க மின்றிக் கூறுவதை மக்கள் கேட்க வேண்டுமாம்” என்று அவரை வேலையை விட்டே நீக்கி விட்டார் கள் மக்கள்,

பாவம்: மத குருவுக்கு வந்த பகுதி நேர வருமானமும் போய்விட்டது. இருந்தும் அவர் கவலைப் பட வில்லை.

மீண்டும் அதே சாராயச் சிந்தனையிலேயே முழு நேரமாக மூழ்கி விட்டார்.

இதற்கிடையே, விஞ்ஞானிகள் எங்கே பேசி னாலும், அந்த கூட்டங்களுக்கெல்லாம் செல்லும் பழக்கத்தையும் மேற்கொண்டார்.

விஞ்ஞானிகள் பேசுவதை எல்லாம் கேட்பார். அதனால், அவருக்குப் புதிய சிக்கல்களும் புதிய சிந்தனைகளும் அடிக்கடி தோன்றிக் கொண்டே இருந்தன.

இவ்வாறு அவர், அடிக்கடி விஞ்ஞானக் கூட்டங்களுக்குச் செல்வதால், விஞ்ஞானிகளுடைய நட்பும் - தொடர்பும் அவருக்கு நல்ல முறையிலே கிடைத்ததை - தனது சிந்தனைக்கேற்ப அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

இந்த நேரத்தில், கி.பி.1791- ஆம் ஆண்டு பிரெஞ்சுக் கலகக்காரர்களின் புரட்சி பயங்கரமாக உருவெடுத்தது.

நாடெங்கும் வன்முறைச் செயல்களை அவர்கள் கடுமையாகக் கட்டவிழ்த்தபடியே இருந்தனர்.

மக்களுக்கும் - அரசுக்கும் இடையே அப்போது பயங்கர மோதல்கள் தலைதூக்கி வந்தன.