பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 擅姆

அந்தச் சிக்கலிலே உள்ள மர்மத்தைக் காண, அவர்

அல்லும் - பகலும் அயராது ஆராய்ச்சியிலே ஈடு படடரிரி.

எரியும் மரச் சுள்ளி ஒன்றை எடுத்து, அந்த சாராயக் காற்றிலே பிடித்தார். உடனே அந்தச் சுள்ளி அணைந்ததைக் கண்டார்.

எரியும் சுள்ளி, சாராயக் காற்றிலே நனைந்ததும் அணைந்து போகிறதே என்ன காரணம்? மீண்டும் அவர் சிந்தனையிலே ஆழ்ந்தார்.

உலக நாடுகளில் வாழ்ந்த வேறு எந்த விஞ்ஞானி களாவது இதற்குக் காரணம் கண்டு பிடித்துள்ளனரா என்பதைத் தேடிப் பார்த்தார்.

கிடைத்த செய்திகளை எல்லாம் சேகரித்து, அவற்றுடன் தனது சிந்தனையிலே சிக்கும் காரணங்களையும் இணைத்து, மேலும் சிந்தித்தபடியே இருந்தார்.

இதற்குள் மாதா கோயில் மதகுரு, சாராயச் சாலையே கதியென மூழ்கிக் கிடக்கிறார் என்ற செய்தி, பலமாகவும், பரவலாகவும் ஊர் முழுவதும் பரவலாயிற்று.

குடிகார மத குருவைக் கோயிலுக்குள் நுழைய விடக் கூடாது என்று அப்பகுதி பெரும்பான்மை மக்கள் குரல் கொடுத்தனர்.

தான்் சாராயம் குடிப்பதில்லை என்பதையும், சாராய ஆராய்ச்சி மட்டுமே நடத்துவதையும், அந்த மத குரு மனம் திறந்து அவர்களிடம் கூறினார்.

அதைக் கேட்டு அவரைக் குறை கூறுவோர் அனைவரும் கொல் என்று சிரித்தார்கள்.