பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿蟹 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஒரு மாதா கோயில் குரு இப்படி சாராய நாற்றத்தோடு சஞ்சரிப்பதைக் கண்ட ஊர் பொது மக்கள், அவரை அருவருத்தார்கள் வெறுத்தார்கள். புனிதமான கோயிலிலே மத போதனை புரிகின்ற மதகுரு, எப்போது பார்த்தாலும் சாராய புட்டியும்கையுமாய் அலைகிறாரே என்று கண்டித்தார்கள் - கேலி செய்தார்கள் - கோபப்பட்டார்கள்.

சாராயக் கிடங்குக்கு யார் போவார்கள்? குடிகாரர்கள் அல்லவா? மத குரு அடிக்கடி அங்கே போய் வருகிறார் என்றால், என்ன பொருள்? என்ற வினாக்களைத் தொடுத்தர்ர்கள்.

இவ்வாறு சாராயச் சாலைக்கு மத குரு போவதும் வருவதும் சிலருக்கு விசித்திரமாகவும், விபரீதமாகவும் காணப்பட்டது.

ஆனால், சாராய கிடங்கு முதலாளியோடு மத குரு மட்டுமே நட்பு கொண்டிருந்தாரே ஒழிய, வேறு விதத் தீயப் பழக்கங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

அந்த சாராய முதலாளி நட்பு அவருக்கு கிடைத்த தால் அவர் அடிக்கடி அந்த கிடங்குக்குப் போய் வரும் வாய்ப்பை உருவாக்கிக் கொண்டார்.

ஒரு நாள், முதலாளியின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு, சாராயக் கலவைகளிலே இருந்து வரும் காற்றை ஒரு பாத்திரத்திலே ஏந்திப் பிடித்தார்.

அந்த வாயுவைப் பல நாட்களாக, பல வித சோதனைகளைச் செய்து பார்த்து ஆராய்ந்து கொண்டே வந்தார்.

சாராயப் பொருளிலே இருந்து வெளியாகும் காற்று, அவரது சிந்தனையிலே ஏதோ ஒரு சிக்கலை ஏற்படுத்தியது.