பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சாராயச் சிக்கல்

சிரிராயம் காய்ச்சும் கிடங்குக்கு அருகே வாழ்ந் தார் ஒரு கிறிஸ்தவ மதகுரு. அந்த இடம் எப்போது பார்த்தாலும் கூச்சலும், குழப்பமும், அடிதடி ஆரவாரமாகவும் இருக்கும்.

அந்த கட்டடமும், சுற்றுச் சார்பு இடமும், எப்போது பார்த்தாலும் துர்நாற்றம் வீசியபடியே காட்சி அளித்தன.

வெளியே இருப்பவர்கள் அதனுள்ளே நுழையும் போது, ஒன்றும் அறியாத கன்னியைப் போல ஒதுங்கி ஒதுங்கிப் போவார்கள்.

ஆனால், உள்ளே இருந்து அவர்கள் வெளியே வரும்போது, ஒரே ஆட்டமும் பாட்டமுமாக ஆர்ப்பாட்டத்தோடு வருவார்கள்.

இப்படிப்பட்ட சுற்றுச் சார்புள்ள இடத்திலேதான்், இயேசுவின் புனித நெறிகளைப் புவனத்துக்குப் போதிக்கும் அந்த மதகுரு வாழ்ந்து வந்தார்.

எப்போது பார்த்தாலும் அந்தக் கட்டடத்தைச் சுற்றி எழும் சாராயக் கலவைகளின் நாற்றத்தைக் கண்டு, ஏன் அது இப்படி துர்நாற்றமாக வீசுகிறது என்று அவர் சிந்தித்தார்.

லிட்ஸ் நகரிலே உள்ள மாதா கோயிலிலே, அவர் ஒரு பகுதி நேரத்தை மட்டும் மத குரு பணிக்காகச் செலவிட்டு வந்தார். மறுபகுதி நேரத்தை, அவர் சாராயக் குடுவைகளோடும் - புட்டிகளோடும் துர்நாற்றத் தோடும் பொழுதைக் கழித்தார்