பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 彗重2翼

துரண்டப்பட்டார்கள்? நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனப் பொருட்களால் அவர் கொலை செய்யப்பட்டது உண்மைதான்் என்பதை, அந்த ஆராய்ச்சி திட்ட வட்டமாக அவர்களுக்கு அறிவித்தது.

இது ஒர் அதிசய அறிவியல் முறையாக அவர்களுக்குப் பட்டது.

குறிப்பிட்ட ஒர் இரசாயன முறையைக் கூடப் பயன்படுத்தாமல், அந்த மர்மக் கொலைக்குரிய இரசாயனத் தன்மையை கொலையாளிகள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்?

இவையெல்லாம், இரசாயனப் பொருள்களைப் பற்றிய மேதைகளுக்கு ஒர் அற்புதச் சிந்தனைச் சிக்கலாகவே அப்போது அமைந்தது.

ஒரு மனிதனைக் கொல்லும் நச்சுத் தன்மையுடைய இரசாயனப் பொருட்கள், அக்காலத்தில் எவ்வளவு கண்டு பிடிக்கப்பட்டனவோ, அவ்வளவு புதிய கண்டுபிடிப்புகள், அவற்றைக் கண்டுபிடிக்கவும் ஆராய்ச்சி செய்யப்பட்டன என்பதை நெப்போலியனுடைய மர்மக் கொலை உலகுக்கு உணர்த்தி வெற்றி பெற்றது.

புவனத்தைத் தனது வீரத்தால் ஆட்டிப் படைத்த மாவீரன் நெப்போலியன், புற்று நோயால் மாண்டான் என்ற பொய்ச் செய்தி, உலக மக்களிடையேயும், மருத்துவர்களிடையேயும் ஒரு சிக்கலை உருவாக்கியது.

மருத்துவ மேதைகள், அந்த மரணச் சிக்கலை விஞ்ஞான அறிவால் துப்பறிந்து, பிரெஞ்சுப்