பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#22 விஞ்ஞானச் சிக்கல்கள்

பேரரசனான் முதலாம் நெப்போலியன், அரசியல் வஞ்சத்தால் விஷம் ஏற்றுச் சாகடிக்கப்பட்டான் என்ற உண்மையை உலகின் முன்னே வைத்தார்கள்.

"விஞ்ஞானம் போன்றது துப்பறியும் கதை, துப்பறியும் கதை போன்றது விஞ்ஞானம்” என்ற பித்தாகரசின் தத்துவம், நெப்போலியனுடைய மரணச் சிக்கலைக் கண்டு பிடித்து உண்மையை உணர்த்துவதற்குப் பயன்பட்டது.

செகத்திலே பற்பல செருமுனைக் களங்களைக் கண்ட அந்த மாவீரன், அவற்றிலே தோல்வி என்பதை அறியாத வீரர்குலத் திலகமான முதலாம் நெப்போலியன், நஞ்சேற்றிக் கொலை செய்யப் பட்டான் என்ற புதிய வரலாறு, விஞ்ஞானத்தால் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. வாழ்க விஞ்ஞானச் சிக்கல்கள்.