பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. இரசாயன வளையம் சிக்கல் உலகப் புகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞான மேதைகளின் அறிவியல் சாதனைகள் எல்லாம் எவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டன என்பதற்கு, பழம் பெரும் கற்பனைக் கதைகள் ஏதும் கண்டு பிடிக்கப் படவில்லை.

ஆனால், அந்த அறிவியல் வித்தகர்கள் ஒவ்வொருவருக்கும் பற்பல சிக்கல்கள் தோன்றி, அவற்றையே அவர்கள் அடிப்படை ஆதாரங்களாக வைத்து அவனி போற்றும் அற்புதங்களை உருவாக்கி இருக்கிறார்கள்.

உலகப் புகழ் பெற்ற மாபெரும் சிந்தனையாளர்களிலே ஒருவரான சர் ஐசக் நியூட்டன் என்ற மேதை, ஒரு நாள் தனது தோட்டத்திலே உட்கார்ந்து கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவரது பாதத்தின் கீழே ஒர் ஆப்பிள் பழம் மரத்திலே இருந்து தொப்பென்று விழுந்ததைக் «:565նց {-f ( ,

அந்தப் பழத்தின் வீழ்ச்சி தான்் அவருக்கு 'புவிஈர்ப்பு சக்தியைக் கண்டு பிடிக்க உதவியாக இருந்தது - சிந்தனைப் புரட்சியை விளைவித்தது.

மாண்டெலேயில் என்ற மற்றொரு விஞ்ஞான வித்தகர், தான்் கண்ட கனவுகளை எல்லாம் தொகுத்துக் குறிப்பெழுதி வைத்தபடியே வந்தார்.

அந்தக் கனவுக் காட்சிகளே, பின்னொரு நாளில் அறிவியலிலே அற்புத ஆராய்ச்சிகளை ஏற்படுத்தின.