பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1龙4彗 விஞ்ஞானச் சிக்கல்கள்

அமெரிக்க நாட்டு விஞ்ஞானியான் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஒரு நாள் காற்றும் புயலுமாக மேகங்கள் மின்னிக் கொண்டிருந்தபோது, இவர் ஒரு காற்றாடியை இரவு நேரத்தில் பறக்க விட்டார்.

அதைக் கண்டவர்கள் எல்லாம் அவரைக் கேலியும் கிண்டலும் செய்தார்கள். அவர்களது வசை மாரிகளை அவர் பொருட்படுத்தாமல், தனது அறிவியல் சிந்தனையிலேயே மூழ்கி ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அதன் விளைவு, மின்னல் என்பது மின்சாரம் தான்், என்பதை உலகறிய நிருபித்துக் காட்டி, அமெரிக்காவிற்கு அழியாப் புகழைத் தேடிக் கொடுத்தார்.

'பட்டுத் துணியில் கண்ணாடித் துண்டைத் தேய்த்தால், அந்தக் கண்ணாடியில் பாசிட்டிவ் அல்லது நேரடி மின்சாரம் ஏறுகிறது. பட்டுத் துணி நெகட்டிவ் அல்லது எதிர் மின்சாரம் பெறுகிறது.

'அந்த இரண்டையும் ஒன்றோடொன்று உராயும்படி தேய்த்தால், மின்சார ஏற்றம் ஏற்படுகிறது என்று விஞ்ஞான உலகம் அன்று வரை நம்பி வந்தது.

விஞ்ஞான வித்தகர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் அந்த சிக்கலை முழுக்க முழுக்க மறுத்தார்.

விஞ்ஞான உலகம் நம்பிக் கொண்டிருப்பதைப் போல, அப்படி ஒன்றும் புதிதாக மின்சாரம் இயற்றப்

டுவதில்லை.

மின்சாரத் திரவம், பட்டுத் துணியிலிருந்து கண்ணாடிக்கு மாற்றிப் புகுத்தப்படுகிறது என்பதை வலியுறுத்தி, பழைய மின்சாரத் தத்துவத்தை மறுத்தா.