பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 蟹翼2$ அதற்காக ஒரு சோதனையிலே அவர் ஈடுபட்டார். இரண்டு முக்காலிகளின் மேல் இருவரை நிற்க வைத்தார்.

அந்த முக்காலிகள் இரண்டுக்கும்-தரைக்கும் இடையே சிறிய கண்ணாடித் தகடுகளை வைத்தார்.

அவை, மின்சாரக் காப்புப் பெற்றிருந்தன. அவர்களிலே ஒருவனின் மீது பாசிட்டிவ் மின்சாரமும், மற்றவன் மீது நெகட்டிவ் மின்சாரமும் ஏற்றப்பட்டன.

அதாவது, ஒருவனிடம் 'மின்சாரத் திரவம்' முன்னை விட அதிகமாக இருந்தது.

மற்றவனிடம் 'மின்சாரத் திரவம் குறைவாக இருந்தது.

அவ் விருவரும், ஒருவரை ஒருவர் தொட்டபோது, தங்களிடமிருந்த மின்சார ஏற்றத்தை இழந்தார்கள். அவர்கள் இருவரும் அதிர்ச்சி பெற்றார்கள்.

ஒருவரிடம் அதிகமாக இருந்த 'மின்சாரத் திரவம், மற்றவனிடம் குறைவாக இருந்த மின்சார நிலையை நிரப்பிற்று.

மின்சாரம் ஏற்றம் பெறாத ஒருவன், நேர் மின்சார ஏற்றம் பெற்றவனையோ அல்லது, எதிர் மின்சாரம் ஏற்றப் பெற்றவனையோ தொட்டால், அவனும் அதிர்ச்சி பெறுவான் - அல்லது மின் பொறி பறக்கும்.

எனென்றால், எதிர்மின்சார ஏற்றம் பெற்றுள்ளவனிடம் இருக்கும் மின்சாரத் திரவத்தைவிட, அவனிடம் அதிகமாக மின்சாரத் திரவம் இருந்தது.