பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12ás] விஞ்ஞானச் சிக்கல்கள்

நேர் மின்சாரம் ஏற்றம் பெற்றவனிடம் இருக்கும் மின்சாரத்தைவிட, அவனிடம் குறைவான 'மின்சாரத் திரவம் இருந்தது.

ஃப்ராங்க்ளின், மேற்கண்டவாறு ஒரு விஞ்ஞான நாடகத்தை நடத்திக் காட்டி, தனது மின்சாரச் சிக்கலை உலகுக்கு அவிழ்த்துக் காட்டி, அறிவியலில் ஒர் அழியாத இடத்தைப் பெற்றார்.

இத்தாலி நாட்டிலுள்ள போலொன்யா பல்கலைக் கழகத்தில், உயிரியல் - உடலியல் துறையில் லுரயீஜி கால்வானி என்பவர் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

அதே பல்கலைக் கழகத்தில் அலெஸ்யாண்ட்ரோ வோல்ட்டாவும் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருக்குத் துணையாகப் பேராசிரியர் கால்வானி வேலை செய்தார்.

அந்த பல்கலைக் கழகச் சோதனைச் சாலையில், அவர் தவளை ஒன்றைக் கீறி ஆராய்ச்சி செய்தார். தவளையின் தண்டு வடத்தின் உள்ளே கூரிய பித்தளை கொக்கி ஒன்று குத்திச் சொருகியிருந்தது. தவளைக் காலின் தசை ஒன்றை, இரும்பினால் செய்த இரண வைத்திய அணுவைக் கத்தி ஒன்றால் கால்வானி தொட்டார்.

அந்தக் கத்தியின் மேல் பகுதி, பித்தளைக் கொக்கியைத் தொட்டவுடன், தவளையின் கால் வெடுக்கென்று பலமாக இழுத்துக் கொண்டது.

மறுபடியும் அவர் அதைப் போலவே செய்தார். அதே விளைவுதான்் மறுபடியும் நேர்ந்தது. அந்தத் தசை வெடுக்கென வெட்டி இழுத்தது.