பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 蔷蜜27 இந்த ஆராய்ச்சி, மின்சாரத்தின் விளைவையே காட்டுகிறது என்று வோல்ட்டா உணர்ந்தார்.

அந்த மின்சாரம், தவளையின் உடலிலே உருவானது என்று தோன்றிற்று. இப்படியும் நடக்குமா என்ற விஞ்ஞானச் சிக்கல் வோல்ட்டாவுக்கு எழுந்தது.

வோல்ட்டா ஒரு நாள், தனது நாக்கின் துணியை மிக மெல்லிய தகரத் தட்டினால் மூடினார்.

வெள்ளிக் கரண்டியின் உட்குழிந்த பகுதியால், தன் நாவைச் சற்றே பின்புறமாகத் தொடும்படி வைத்தார். பின் அந்தக் கரண்டியின் காம்பைத் தகரத்தில் படும்படி விட்டார்.

தனது நாக்கு, தவளையைப் போல் துடிக்கும் என்று எதிர்பார்த்தார். அதற்குப் பதிலாக, அது - அவருக்கு ஒரு புளிப்புச் சுவையை உண்டாக்கி யதைக் கண்டார்.

'நம்பிக்கை இல்லா நிலையைப் பெற்றிருந்த நான், ஆர்வத்தோடு நம்பிக்கை உடையவனாக மாறிவிட்டேன்' என்றார். இவ்வாறாக, முதன் முதலாக மின்சாரக் கலம் ஒன்றை வோல்ட்டா இயற்றினார்.

இந்த வோல்ட்டா மின் அடுக்குகள், மின்சார ‘ஆராய்ச்சியிலும், இரசாயன ஆராய்ச்சியிலும் மாபெருந் துறைகளுக்கு அகல வழி திறந்து விட்டன.

இவ்வாறு, பல சிக்கல்கள் ஒவ்வொரு

விஞ்ஞானிகளுக்கும் அவ்வப்போது ஏற்பட்டதின் விளைவாகத்தான்், இந்த உலகில் பற்பல அறிவியல் கண்டுபிடிப்புகளை அவரவர் ஆராய்ச்சிகளால் பெற முடிந்தது.