பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 扩鬣 விஞ்ஞான விற்பன்னர் கோகுலேவுக்குப் பெரிய சிக்கலை விளைவித்தது. அந்தச் சிந்தனைச் சிக்கலிலே சிக்கித் தவித்த அவருக்கு அமைதியே தென்பட வில்லை.

அல்லும்-பகலும் அந்த அணுக்களின் அமைப்பு முறையினைப் பற்றிய சிந்தனையிலேயே உழன்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது சிந்தனைகள் மிகத் தொலைவிலே உள்ள வான மண்டலத்தை நோக்கிச் சிறகடித்துப் பறந்து சென்றன.

சிந்தனைக் கண்ணின் ஆற்றலால் அவர் எந்தெந்த பொருட்களை ஊடுருவி நோக்க முடியுமோ அவற்றையெல்லாம் துருவித் துருவிப் பார்த்தார்.

வான வெளியில் இருந்த அந்த அணுக்களது நீண்ட வரிசைகளின் வளைவு நெளிவான நாட்டியம், அவரை அதிசயத்தில் ஆழ்த்தியது.

அந்த நாட்டிய அணுக்களின் நளினத்திலே தனது ஆராய்ச்சியைப் பதிய வைத்தார்.அப்போது அணுக்கள் நெளிந்தாடுவதைக் கண்டார்.

அவை வளைந்து வளைந்து ஆடுவதைப் பார்த்தார். அவை இடமிருந்து வலம் ஒடுவதைப் போலக் கண்டார். வலமிருந்து இடப் பக்கத்திற்கு மீண்டும் வளைந்து ஒடி வருவதைப் போல, அதுவும் ஆடி ஆடி ஒடி வருவதைப் போலவும் பார்த்தார்.

கீழ் - மேலாக, அணுக்களது உருவம் சிறுகுவதும் பெருகுவதுமாக அவருக்குப் புலப்பட்டது. மேல் - கீழாக அவை நீண்டு வளர்ந்து நீள்வதைப் போலத்

தெரிந்தது.