பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

靈3盤劃 விஞ்ஞானச் சிக்கல்கள்

இவற்றை எல்லாம் அவரது அறிவு விழிகள் மாறி மாறி நோக்கி, அற்புதத்தில் ஆழ்ந்த படியே இருந்தன் திடீரென்று அந்த அதிசயச் சம்பவத்திலே ஒரு வியப்பு மிக்கக் காட்சியை அவர் கண்டார்.

அந்த அணுக்கள் வரிசைகள், அவரது கண்களுக்கு பாம்புகளைப் போலக் காணப்பட்டன. பாம்பு எப்படி வள்ைந்து, நெளிந்து ஊர்ந்து ஒடுமோ, அதனைப் போலவே அனைத்து அசைவுகளும் அவற்றில் இருப்பதைப் பார்த்தார்.

தனது விழிகளை மறுமுறை நன்றாகத் தேய்த்துக் கொண்டு மீண்டும் அதே காட்சியை ஊன்றி ஊன்றி நோக்கினார்.

ஒர் பாம்பு, தலை முதல் கால் வரை வளைந்து வளைந்து நடனமாடிக் கொண்டு, அதனுடைய வால் துணியைத் தன் வாயால் கல்விக் கொண்டே ஆடிக் கொண்டிருந்தது.

மற்றொரு பாம்பு, தனது வாலை அதன் வாயாலே கவ்விக் கொண்டு இருக்கிறதே கவ்விக் கொண்டிருப்பதைவிட, அது - அதே கோலத்திலே அசைந்து அசைந்து உடலை ஆட்டிக் கொண்டும் இருக்கிறதே! ஏன், என்று சிந்தித்தார்.

ஏனென்றால், அவை ஜியோமெட்ரிக் எண்களையும், அதன் சூத்திரங்களையுமே கொண்ட ஒரு கூட்டுப் பொருளாகப் பக்கத்துக்குப் பக்கம் காணப்படுகிறது.

அறிவியல் அறிஞர் கோகுலே கண்ட அரவ நாட்டியக் காட்சியானது, வானவெளியின் அணுக்களின் அமைப்பு எவ்வாறு ஒழுங்கான முறையில் இயங்குகின்றன என்ற சிக்கலை அவிழ்த்திடும் அறிவியல் சிந்தனையை உருவாக்கிக் காட்டியது.