பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 堕3疹 அலுவலக வியாபார விவகாரமாகப் பேசி முடித்திட ஒர் இரவு வந்தார்!

இருவரும் பேசினர்! இனிமையாகவே வாதாடினர் களி போதையிலே மூழ்கினர் இருள் நகர்ந்தபடியே இருந்தது.

இரண்டாமவர், குடி மயக்கத்தால் மயங்கிக் கீழே விழுந்தார்! அவ்வளவுதான்் - பாவம்!

உடலிலே காயம் இல்லை! ஆனால், வாயிலே இருந்து ரத்தம் குபுகுபுவென்று குமுறிக் குமுறி வந்தபடியே இருந்தது:

இந்த நேரத்தில் அவரது விட்டுக் கதவை யாரோ தட்டும் ஒசை போல் அவருக்குக் கேட்டது!

இந்த பயங்கரமான நேரத்தில் கதவைத் தட்டுபவர் யார் என்று பயந்த அவர், இரண்டாமவரின் வாய் - உடல் எல்லாவற்றையும் ரத்தம் தெரியாமல் சுத்தம் செய்து, அணிந்திருந்த சட்டையைக் கழற்றி வேறு உடையை மாற்றினார். பிறகு, அவகாசமாகப் போய் தனது விட்டுக் கதவைத் தட்டியது யாரென்று திறந்து பார்த்தார்.

வேறு யாருமல்ல, தனது பாதுகாப்புக்காக வளர்க் கப்பட்ட வேட்டை நாய், கதவைப் பிராண்டிய படியே கிடந்ததைக் கண்டார்.

நாயைப் பார்த்த அவர் ஒருவாறு ஆறுதல் அடைந்த்ார்.

விரைவாக, இரண்டாமவரின பிணத்தைத் தான்ே சுமந்து காரிலே வைத்துக் கொண்டு, இறந்தவர் விட்டின் முன்பு எவருமறியாமல் போட்டு விட்டுத் திரும்பினார்.