பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶擔 விஞ்ஞானச் சிக்கல்கள்

தொழிற்சாலைக்கு வேண்டிய எல்லா பணத் தையும் முதலிடு செய்தவர், முதலாம் உரிமையாளர். இரண்டாமவர், அந்த தொழிற் சாலையிலே தயாராகும் மருந்துகளை உலகச் சந்தையிலே விற்றுப் பணமாக்குபவர்.

இவராலேதான்் அந்த தொழிலகத்துக்கு ஏராளமான வருமானம் வந்தது.

அவ்வளவு திறமையாக உழைப்பவர் என்பதால், அவர் உழைப்புப் பங்கு பெறும் உரிமையாளராக மட்டுமே இருந்தார்.

நாளடைவில், அந்த தொழிலகம் கோடீஸ்வரர் அலுவலகமாக மாறிவிட்டது. இருவரும் பெரும் பணக்காரர்களாகி விட்டனர்.

இந்நிலையில், திடீரென்று இருவரிடையேயும் மனக்கசப்பும் பகையும் மூண்டது:

எவ்வளவுக்கு எவ்வளவு நெருக்கமாகப் பழகினார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களி டையே விரோதமும் ஏற்பட்டது! காரணம், பொருட் பகைதான்்!

அவர்களுக்குள் மூண்ட பகை வரலாறு அலுவலகத்தாருக்கோ, அல்லது வியாபார சம்பந்தப் பட்டவர்களுக்கோ - யாருக்கும் தெரியாது.

அரசியல்வாதிகளின் பகையைப் போல, அவர்களிடையே, உதட்டிலே தேனுமாய் - உள்ளத்திலே நஞ்சுமாய் பகை இருந்து வந்ததை எவராலும் அறிய முடியவில்லை.

முதல் உரிமையாளர் வீட்டிற்கு, இரண்டாமவர்