பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ó37 'ஏற்கனவே ஒப்புக் கொண்ட உண்மைகளை மட்டுமே பயன்படுத்தி, தீர்க்க வேண்டியதாக உள்ள பிரச்னைக்கு விடையைக் காண முயல்வது இதுதான்் விதி தரு தருக்க முறையாகும்.

பேரறிஞர் பித்தாகரசின் இந்த விதி தரு தருக்க முறைத் தத்துவத்தை, மேலை நாட்டுத் துப்பறியும் கதை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டு, கதைச் சம்பவங்களைப் பின்ன ஆரம்பித்தார்கள்.

அவர்கள் எழுதும் துப்பறியும் கதை ஒவ்வொன்றிலும், இந்த விதி தரு தருக்க முறையே முதுகெலும்பாக அமைந்துள்ளது.

பொழுது போக்குக்காகப் படிக்கும், துப்பறியும் கதைக்காகப் படிக்கும் - துப்பறியும் கதைக்காகவா பித்தாகரஸ், இந்தத் தத்துவத்தைக் கண்டு பிடித்தார்? இல்லை, ஜியோமெட்டிரிக் கணித இயல் துறையை, விஞ்ஞான ரீதியாக வளர்க்க ஆர்வப் பட்டே, இந்த தத்துவத்தினை அவர் அரும்பாடுபட்டு, உருவர்க்கினார்.

விஞ்ஞானம் போன்று விளங்கும் துப்பறியும் கதையும், துப்பறியும் கதைபோல உள்ள விஞ்ஞானமும், பித்தாகரசின் இந்த தத்துவத்தைப் பொதுவாக ஏற்றுப் பொலிவு பெறலாயிற்று.

வேண்டுமானால், ஒரு துப்பறியும் கதையினையே உதாரணத்துக்காக இங்கே பார்ப்போம் - படிப்போம். ஒரு பெரிய வெடிமருந்துச் சாலைக்கு உரிமையாளர் இருவர். ஒருவரை விட்டு ஒருவரைப் பிரியா அளவுக்குப் பழகிவந்த உயிர் நண்பர்கள் ←£Ꮰ6ajöᎢé6YᏈ .