பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3é瘟 விஞ்ஞானச் சிக்கல்கள் புதிய புதிய விதிகளை உருவாக்கிட முன் வந்தார் கள்.

ஒரு செயலின் காரண காரியத் தொடர்பில் விளக்கம் கூறும் தருக்க முறைகளையும் அவர்கள் பரிசீலனை செய்தார்கள்.

இன்றுவரை, ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளான பிறகும் கூட, அவர்கள் ஜியோமெட்டிரிக் துறையில் கண்டு பிடித்தத் தருக்கரீதியான விதிகள் எல்லாம், எவ்விதத் தவறு மின்றி மக்களுக்குப் பயன்பட்டு வருவதைப் பார்க்கி றோம்.

'எந்தத் துறைகளிலே, மனிதன் தன் அறிவையும், சிந்தனையும் செலுத்தி வருகிறானோ, அந்தத் துறைகளிலே அது பயன் படுகிறது.”

இது தலை சிறந்த ஒரு தத்துவச் சூத்திரமாகும். இதனைத் தருக்கரீதியாகக் கண்டு பிடித்துத் தரணிக்குத் தந்தவர், கிரேக்க மாபெரும் ஞானி பித்தா கரஸ்தான்்!

இந்த தருக்கவாத முறைக்கு, "விதி தரு தருக்க முறை என்ற பெயரை அவர் சூட்டினார்.

'விதி தரு தருக்க முறை என்ற பெயருக்கு விளக்கம் என்ன?

“ஒரு பொதுக் கருத்திலே இருந்து, தனிப்ப்ட்ட உண்மையைப் பிரித்தெடுப்பதே, விதி தரு தருக்க முறை” என்று பொருள் படும்.

அவ் வாறானால், விதி தரு தருக்க முறை என்றால் என்ன? என்ற வினாவுக்கு பித்தாகரஸ் என்ன விடை கூறுகிறார் தெரியுமா? படித்துப் பாருங்கள்.