பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 塑35 அல்லது, மேல் நாட்டுத் துப்பறியும் கதையைப் படித்து விட்டுச் சம்பவங்களைத் தலை கீழாக மாற்றி, "மொட்டத் தாதன் குட்டையில் வீழ்ந்தான்் என்ற பாணியில் எழுதுகிறார்கள். தமிழ் நாட்டுக் கிரைம் நாவல்காரர்கள், அதை அழகாகக் காப்பியடித்து மறைந்த சிறுகதை எழுத்தாளர் புதுமைப் பித்தன் கூறியதைப் போல விபச்சாரி பெற்ற பிள்ளைகளைப் போல பணம் திரட்டுகிறார்கள்.

கிரேக்க மேதை தேலிஸ் கண்டு பிடித்த தத்துவத்தை, நமது எழுத்தாளர்கள் பின்பற்றி உணராததே இந்த கார்பன் வீட் கதைகளுக்குக் காரணமாகும்.

இவ்வாறு, கிரேக்க விற்பன்னர் தேலிஸ் கண்டு பிடித்த சூத்திரத்திற்கேற்ப, ஜியோமெட்டிரிக் கணித இயல், மேலும் விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் வளரலாயிற்று.

அதற்கு அடுத்த படிகளாகக் கருதப்படத் தக்கவை, கிரேக்க நாட்டுப் பேரறிஞர் பித்தாகரசும், வரது மாணவர்களும் இயற்றிய சாதனைகளாகும்.

ஜியோமெட்டிரிக் கணித இயலை, அதன் பயன்படு செயல்களிலே இருந்து தனியே பிரிந்து, அதற்கென தனி மதிப்பைத் தேடித் தந்த மேதை பித்தாகரஸ்தான்்!

அதன் உண்மைகளை, நிரூபணங்களைத் தருக்கரீதியான முறையில் கண்டு பிடிக்க அவர் அயராது உழைத்தார்.

அவரது மாணவர்களும், பித்தாகரசால் தோற்று விக்கப்பட்ட மன்றத்தினரும் தீவிரமாகச் சிந்தித்து