பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3佥 விஞ்ஞானச் சிக்கல்கள்

அங்கேயே, நமது நாட்டுப் போலீசாரைப் போல விசாரணையில் ஈடுபட்டு, யார் மீதாவது குற்றத் தைச் சுமத்தியிருப்பார்.

அவ்வாறு அவர் சுமத்தும் குற்றம், நிரபராதிகளைக் குற்றவாளிகளாக்கி நீதியை இழக்கச் செய்திருக்கும். அல்லது, குற்றம் செய்தவர்கள் வழக்கு மன்றங்கள் ஏறி வழக்குரைக்கும்போது, நிரபராதி என்று தீர்ப்புக் கூறப்பட்டிருப்பார்கள்.

குற்றவாளி, தனது குற்றம் கண்டு பிடிக்கப் படாததால், அவனது திறமையை மேலும் வளர்க்க, சமுதாயத்தைப் பல வழிகளிலே சூறையாடிக் கொண்டிருப்பான்.

கணிதமேதை தேவிஸ், எகிப்தியர்களின் நில அளவைச் செயல்களை ஊன்றி ஆராய்ச்சி செய்ததின் விளைவால் உருவான தத்துவம்தான்், சமுதாயச் சிக்கல்களையும், சீர்கேடுகளையும்கூட அவிழ்த்துவிடும் தத்துவமாக மாறி, துப்பறியும் கதைகளுக்கும் பயன்படலாயிற்று.

இந்த தத்துவத்தையே மேலை நாட்டுத்துப்பறியும் நிபுணர்கள், துப்பறியும் கதைக்குரிய கருவாக, உருவாகப் பயன்படுத்திட முன் வந்தார்கள்.

அதனால்தான்், துப்பறியும் கதைகள் எழுதும் மேல்நாட்டு எழுத்தாளர்களுக்குச் சிறப்பான பயனையும் - புகழையும் தந்து வருகிறது.

நமது நாட்டில் போலிப் புகழ் பெற்றுள்ள துப்பறியும் கதை எழுத்தாளர்கள் அனைவரும், மேல் நாட்டு துப்பறியும் கதையின் பாத்திரப் பெயர் களையும், சம்பவங்களையும், புத்தகப் பெயரையும் மாற்றிக் காப்பியடித்து எழுதுகிறார்கள்.