பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ●33

வைத்திருப்பார்கள்? என்ற கேள்விகளை

எல்லாம் அந்த நிபுணர் எழுப்பித் தன்னைத் தான்ே கேட்டுக் கொண்டார்.

விடை காண முடியாத ஏதோ ஒரு வியப்பான மர்மச் சிக்கல், இந்த பிணத்தின் அடிப்படையிலே இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். இந்தச் சிக்கலை அறுப்பதா அல்லது அவிழ்ப்பதா என்ற முடிவு அவரது சிந்தனையிலே ஒரு சிக்கலாகவே உருவெடுத்தது.

தேலீஸ் என்ற கிரேக்க தத்துவ ஞானியின் சூத்திரத்தின்படி, 'அந்த சவம் எதுவரை வழிகாட்டிச் செல்கின்றதோ, அதுவரை செல்வதே சரி” என்ற முடிவுக்கு அந்த துப்பறிபவர் வந்தார்.

அதற்கேற்ப, அன்றிரவெல்லாம் அந்தப் பிணத்தையே அவர் சுற்றிச் சுற்றி வந்து கொண் டிருந்தார்.

இறுதியில், அந்தப் பிணமே தனது முடிவை அவருக்கு விடையாக அறிவித்தது. எப்படி?

கொலையைச் செய்து பிணத்தை எவன் அந்த திருவிழாவிலே விளையாட விட்டானோ, அவனிடமே அந்தப் பிணம் இறுதியிலே சென்று கொலைகாரனைச் சிக்கலிலே சிக்க வைத்து விட்டது.

துப்பறியும் நிபுணர், சவத்தின் சிக்கலை அறுத்து விடுவது என்ற முடிவுக்கு அவசரப்பட்டு வந்திருந்தால், பிணம் ஒருவர் மீதிருந்து மற்றவர் மீது சாய்ந்தபோதே சென்று தடுத்து நிறுத்தியிருப்பார்.