பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி. 呜4接 துப்பறியும் துறையைச் சேர்ந்த ஒருவர் மட்டும் முதலாமவரின் முகச் சாயல்களை ஊன்றிக் கவனித் துப் பார்த்தபடியே நின்றார். ஏதும் பேசவில்லை. இந்த இடத்தில் அந்த துப்பறியும் நிபுணர் பித்தாகரசின் விதி தரு தருக்க முறை'யின் தத்துவத்தை சிந்தனை செய்தபடியே அவர் முகத்தை நோக்கமிட்டார்.

ஏற்கனவே ஒப்புக் கொண்ட உண்மைகளை மட்டுமே பயன்படுத்தி, தீர்க்க வேண்டியதாக உள்ள ஒரு பிரச்னைக்கு விடை காண முயலுகிறது’ என்பதே பித்தாகரசின் தத்துவமாகும்.

இரண்டாமவரை முதலாமவர், பணத் தகராறு அல்லது தொழில் தகராறு காரணமாகக் கொன் றிருக்க வேண்டும் என்பதை ஊகித்தார்.

பிரேத விசார்ணையில் இறந்தவருக்குப் பகை ஏதும் இருப்பதாக எவ்விதத் துப்பும் கிடைக்கவில்லை.

ஆனால், இவர் ஒருவர்தான்் தொழிலகம் துவங்கியது முதல் இன்று வரை தங்களுக்கிடையே எவ்விதப் பகையுமில்லை என்று அடித்துப் பேசு கிறார்.

இந்த பேச்சின் மர்மத்தை - உண்மையை, நாம் எப்படிக் கண்டு பிடிப்பது?

இருவருக்கும் எவ்விதத் தகராறும் இல்லை என்றல்லவா கூறுகிறார்?

உண்மையான நண்பனை இழந்து கண்ணிர் விடுவதாகக் கூறுகிறாரே, யாரை வேண்டுமானாலும்