பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44姆 விஞ்ஞானச் சிக்கல்கள்

நாட்கள் கடந்தன. இரண்டாமவர் இறந்த நினைப்பே மறந்து போய்விட்டது - மற்றவர்களிடம். அவ்வளவு நாட்களாகி விட்டன. முதலாமவரும் 'பாம்பாவது - கீம்பாவாது என்றார்.

ஒரு நாள் காலை முதலாமவர் பிணமானார் என்ற பேச்சு ஊர் முழுவதும் பரவியது - பரபரப் பானார்கள் ஊர் மக்கள்.

இந்த செய்தி துப்பறியும் நிபுணருக்கும் வந்தது. அவர், சில டாக்டர்களை அழைத்துக் கொண்டு வந்து, 'பாம்பு கடித்து அவர் செத்திருக்க வேண்டும். சோதனை செய்து பாருங்கள்' என்றார்.

காவல் துறையும், துப்பறியும் துறையும் திடுக் கிட்டன. டாக்டர்களும் திரும்பி வந்து பாம்பு கடித்து முதலாமவர் இறந்ததாகக் கூறினார்கள்.

'ஒரு பெரும் பணக்காரர் மீது திடீரென்று குற்றம் சாட்டிவிட முடியுமா?

"தொலைக்கு ஆதாரம் ஏதும் அற்றவரை எப்படிக் குற்றஞ் சாட்ட முடியும்?

சொன்னால்தான்், உலகமும் - நீதியும் நம்புமா? அதனால், மெளனமாயிருந்தேன்.

ஆனால், அன்றே கூறினேன். குற்றவாளி பாம்பு கடித்து, சாவர் என்று! நீங்கள் எல்லாம் அப்போது வியப்படைந்தீர்கள் அல்லவா?”

இரண்டாமவரை யார் கொன்றார்கள்? எப்படிக் கொன்றார்கள்? ஏன் கொன்றார்கள்? என்ற சிக்கலுக்கு விடை புரியாது நீங்கள் எல்லாம்