பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 酋颂5

தவித்தபோது, எனது முடிவை எவ்வித ஆதாரமும் காரண, காரியமின்றி கூற முடியாமலிருந்தேன்.”

உடனே, துப்பறியும் குழுவும், காவலர் குழுவும் கூடி, நீங்கள் கூறியபடியே முதலாமவர் செத் திருக்கிறாரே எப்படி?” என்று துப்பறியும் வித்தகரை பரபரப்புடன் கேட்டனர்.

அதற்கு நிபுணர், 'இரண்டாமவரைப் பங்குத் தகராறு காரணமாகவோ, பணத் தகராறு பற்றியோ, தொழில் பிரச்சினைக் குறித்தோ முதலாமவர் கொலை செய்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு, அவரது பேச்சு, செயல், முகபாவ அறிகுறிகள் வாயிலாக அன்றே நான் உணர்ந்தேன்.

"அவரைக் கடித்து சாகடித்த பாம்பு இதுதான்்” என்று, ஒர் நல்ல பாம்பைக் கூடையிலே இருந்ததை எடுத்துக் காட்டினார்.

'இந்த பாம்புதான்், அவரைக் கடித்தது என்பதை எப்படி நாங்கள் நம்புவது? என்று காவல் துறை யினர் கேட்டனர்.

உடனே, துப்பறியும் நிபுணர், 'குற்றவாளி பாம்பு கடித்துச் சாவார் என்று நான் கூறியதைக் கேட்ட குற்றவாளி, தனது வீட்டையெல்லாம் துப்புரவு செய்தார்.

இரவு, பகல் முழுவதுமெல்லாம் தன் பங்களாவின் சந்து பொந்துகளையும் சாளரங்களையும் கதவு களையும் தாளிட்டே வைத்தார்.

இரவு நேரங்களில் தன் பங்களாவின் விளக்கு களையும் எரியும்படியே காவல்காரரர்களுக்கு உத்திரவிட்டிருந்தார்.