பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

áís i விஞ்ஞானச் சிக்கல்கள்

எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது பங்களா வாயில்களுக்கு எல்லாம் இரவு பக்லாகக் காவல் காக்க காவலர்களை நியமித்திருந்தார்.

இது உண்மையா - இல்லையா? என்பதை, அந்த பங்களா வேலைக்காரர்களையும் அழைத்துக் கேளுங்கள்.” என்றார் நிபுணர்.

பணியாளர்கள் அனைவரும் துப்பறியும் நிபுணர் கூறுவதெல்லாம் உண்மையே! என்று ஒப்புக் கொண்டதைக் கண்ட காவல் துறையும், துப்பறியும் குழுவும் வியப்படைந்தன.

விஞ்ஞானம் போன்று விளங்கும் துப்பறியும் கதையும், துப்பறியும் கதைபோல உள்ள விஞ்ஞானமும், பித்தாகரசின் இந்த தத்துவத்தைப் பொதுவாக ஏற்றுப் பொலிவு பெறலாயிற்று.

துப்பறியும் நிபுணர் மீண்டும் துப்பறியும் விவரங்களை விளக்க ஆரம்பிக்கையில், 'இரண்டாமவர் கொல்லப்பட்டபோது அவர் அணிந்திருந்த சட்டை இது. இதன் சலவைக் குறியும் குற்றவாளி சட்டையின் சலவைக் குறியும் ஒன்றாக இருந்தது.

'இதோ பாருங்கள் அந்த சட்டை என்று, அவர், அந்த பாம்புக் கூடையிலே இருந்த சட்டைக் குறியையும், குற்றவாளியினுடைய சட்டையிலே இருந்த குறியையும் எடுத்துக் காட்டினார்.

நான் ஒரு நல்ல பாம்பை விலைக்கு வாங்கினேன். அதை வளர்த்தேன்.

பிணமாகிவிட்ட இரண்டாமவர் உடல் மீது போட் டிருந்த சட்டையை, அந்த பாம்புக்கு படுக்கை யாக்கினேன்.