பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 璽47 'தினந்தோறும் அந்த கூடைமீது படுத்துப் படுத்து, அந்தப் பாம்பு இரண்டாமவரின் பினச் சட்டை யிலே படிந்திருந்த வியர்வை நீர் நாற்றத்தை, அதன் மோப்பத்தால் நன்கு முகர்ந்து இதன் வாசனையை உணர்ந்தது.

ஒரு நாள், பாம்பு வெளியே சென்றது. இந்த வியர்வை மோப்பமுடைய ஆளை, எந்த பங்களாவில் இரண்டாமவர் செத்தாரோ அதே பங்களாவில், அதே வியர்வை நாற்றமுடைய உடலைக் கடித்து விட்டது.

'காரணம், எந்த வியர்வை நாற்றத்தை அது நாள்தோறும் சுவாசித்ததோ, அதே வியர்வை வாடை பாம்புக்கு விரோதியாகி விட்டது. அதனால்தான்், அதே வியர்வை நாற்றமுடைய உடலைத் தேடி கடித் திருக்கிறது என்றார் நிபுணர்.

இந்த விகிதத்தில் துப்பறியும் விளக்கத்தைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இதை எப்படி நம்ப முடியும்? என்ற கேட்டுக் கொண்டனர் ஒருவரை - ஒருவர்.

அதற்கு நிபுணர், “நீங்கள் எல்லாரும், அவரவர் சட்டையைக் கழற்றி பாம்பின் மீது எறியுங்கள்.

குற்றவாளியின் வேறு சட்டையினையும் எறியுங்கள். அதற்கு விரோதமான வாடை எதிலே இருக்கின்றதோ அந்தச் சட்டையை, அது கீறிக் கொத்தியே தீரும்” என்றார்.

இவ்விதமே, அனைவரும் செய்தபோது குற்றவாளியின் சட்டை மோப்பத்தை நன்கு சுவாசித்து உணர்ந்த பாம்பு, அந்த சட்டைமீது சீறிச்