பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4器霉 விஞ்ஞானச் சிக்கல்கள் சீறி விழுந்துக் கொத்தியதைக் கண்டு, அவர்கள் அனைவரும் வியப்படைந்தனர்.

உடனே காவல் துறையினருள் ஒருவர் எழுந்து, 'இரண்டாமவரைக் கொலை செய்தவர் முதலாமவர் தான்் என்பதை, எப்படி உங்களால் திட்டவட்டமாக உணர முடிந்தது? அவ்வாறு உணர்ந்த பிறகுதான்ே உங்களால் பாம்பைக் கொண்டு துப்பறிய முடிந்தது?” என்று கேட்டார்.

அதற்கு துப்பறியும் நிபுணர், 'நான் கிரேக்கக் கணித மேதை பித்தாகரசினுடைய தத்துவத்தைப் படித்திருக்கிறேன்.

"அந்த தத்துவம், துப்பறியும் கதைக்குரிய சிக்க லுக்கு மட்டுமல்ல. பொதுவாக எல்லாச் சிக்கல் களுக்கும் பொருந்துவதாகவே இருக்கும்.”

அவரது, 'விதி தரு தருக்க முறையின் சூத்திரம் இது.

"ஏற்கனவே ஒப்புக் கொண்ட உண்மைகளை மட்டுமே பயன்படுத்தி, தீர்க்க வேண்டியதாக உள்ள பிரச்சினைக்கு விடை காண முயல்கிறது” என்பதே பித்தாகரசினுடைய 'விதி தரு தருக்க முறையின் விதியாகும்.

'முதலாமவர் தான்், இரண்டாமவரைக் கொலை செய்தார் என்பதைத் திட்டவட்டமாகத் திடமாக உணர்ந்தேன்.”

"அந்த ஒப்புக் கொண்ட உண்மையை மட்டுமே பயன்படுத்தி, தீர்க்க வேண்டியதாக உள்ள இந்த கொலைச் சிக்கலை அவிழ்க்க விடை காண முயன்றேன்”