பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 蟹4罗 'அதனால் தான்், உண்மையான கொலை காரனை என்னால் துப்பறிய முடிந்தது என்று நிபுணர் கூறியதைக் கேட்ட அனைவரும் வியப்பும் - மகிழ்வும் அடைந்தார்கள்.

'கொலை செய்தவன் யார்? ஏன் செய்தான்்? எப்படிச் செய்தான்்? என்ற சிக்கல்களை அவிழ்த்திட நான் பித்தாகரஸ் கண்டுபிடித்த விதி தரு தருக்க முறையைப் பயன்படுத்தினேன்.”

'இல்லாவிட்டால், இந்த சிக்கலை அறுப்பது என்றால், கெர்லை நடந்தபோதே அவசரப்பட்டு முதலாமவர்தான்் கொலை செய்தவர்' என்று கூறியிருப்பேன்.

'அவ்வாறு கூறியிருந்தால், இந்தக் கொலைச் சிக்கல், மேலும் சிக்கலிலே கொண்டு போய் நம்மை விட்டு விட்டிருக்கும். குற்றவாளியும் பிடிபட்டிருக்க மாட்டார்.

'பொறுமையோடும் - பொறுப்போடும், சிந்தனை யாளர் பித்தாகரஸ் கூறியபடி நடந்ததால் தான்், சமுதாயச் சீர் கேட்டினைக் களைந்து, உண்மையை உலகுக்கு உணர்த்த முடிந்தது.

விஞ்ஞானம் போன்று விளங்கும் துப்பறியும் கதையும் - துப்பறியும் கதை போல் உள்ள விஞ் ஞானமும் - பித்தாகரசின் தத்துவத்தைப் பொதுவாக ஏற்றுப் பொலிவு பெறலாம் என்பதற்கு, இந்த கொலை ஒர் எடுத்துக் காட்டு என்று கருதுகிறேன் எனறாா.

இந்த விதி தரு தருக்க முறையைத்தான்் உலகப் பிரசித்திப் பெற்ற துப்பறியும் நிபுணரான கானன்