பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷 விஞ்ஞானச் சிக்கல்கள் டாய்ல் என்பவர் தனது கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் என்ற பெயரிலே நடமாட விட்டுத் துப்பறியும் கதைகளை இயக்கியுள்ளார்.

இந்த ஷெர்லாக் ஹோம்ஸ், விதி தரு தருக்க முறையைப் பற்றி என்ன கூறுகிறார் தெரியுமா?

“ஒரு சொட்டு நீரை ஆதாரமாகக் கொண்டு, ஒரு தருக்க நிபுணர், அட்லாண்டிக் சமுத்திரம் உண்டு என்றதையோ, நையாகரா நீர் வீழ்ச்சி என்று ஒன்று உண்டு என்றதையோ, யூகத்தால் - அதாவது விதி தரு முறைத் தர்க்கத்தால் முடிவு செய்யலாம்.

'அவற்றுள் ஒன்றையோ மற்றொன்றையோ பற்றி அவர் முன்னால் கேள்விப்பட்டிருக்க வேண்டியதில்லை”

'உயிர் அனைத்தும் ஒரு மாபெரும் சங்கிலித் தொடர். அத் தொடரில் ஒரு வளையம் மட்டும் நமக்குத் தெரிந்தால் போதும்.

'மற்ற வளையங்களை எல்லாம் நாம் ஊகித்து அறியலாம்.”

'மற்றெல்லா விஞ்ஞானத் துறைகளைப போலவே 'விதி தரு தருக்க முறை ஆக்கக் கூறுகளைப் பகுத்தாராய்தல் என்னும் விஞ்ஞானத் துறைகளிலும் - நெடுங்காலம் பொறுமையோடு பயில்பவர்களுக்கே அறிவு கிட்டக் கூடும். என்கிறார்”

'நானும், ஷெர்லாக் ஹோம்ஸ் அறிவுரைப்படியே விதி தரு தருக்க முறையைப் பின்பற்றினேன்' என்று, நிபுணர் பெருமையோடும் பெருமிதத்தோடும் கூறினார்.