பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 鲨5篡 துப்பறியும் கதையிலே வரும் சிக்கல்களை அந்த தத்துவத்தால் எப்படி அவிழ்க்கலாம் என்று முயன்று பார்த்தேன், வெற்றி பெற்றேன்' என்றார் நிபுணர். பித்தாகரஸ், தேவிஸ் போன்ற கிரேக்க மரி மேதைகளின் தத்துவங்கள் கணிதக் கலைக்கு மட்டுமல்ல உரியவை.

துப்பறியும் கதைகளை, எதிர்கால எழுத்தாளர்கள் தங்களது தத்துவங்களின் அடிப்படையிலேதான்் எழுதுவார்கள் என்ற போக்கிலே அந்த பேரறிஞர்கள் இத்தகைய தத்துவங்களை உருவாக்கவில்லை.

துப்பறியும் கதைகளைப் போன்ற பற்பல சிக்கல்களை உருவாக்கி உருவாக்கி வெற்றி கண்டு வரும் விஞ்ஞானத் துறைக்காகவே, அந்த அறிவியல் திலகங்கள் இத்தகைய விதிகளை உருவாக்கினார் శ్రీశ్రీ,

அதனால்தான்், விஞ்ஞானம் மென் மேலும் வளர் பிறை போல் வளர்ந்து வரும் இந்த நாளிலும், அந்த தத்துவ வித்தகர்களின் அற்புதச் சிந்தனைகளால் உருவான விஞ்ஞான விதிகள் கணிதத் துறைக்கும் - துப்பறியும் கதைகளுக்கும், விஞ்ஞான வளர்ச் சிக்கும், பொதுவாக எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும் பொருத்தமான சிந்தனைகளாகவே தல்ை நிமிர்ந்து நின்று வையம் வாழ்த்தும்படியே வாழ்கிறது.

ஒரு பிரச்சினையில், என்ன நிகழ்கிறது என்பதை நாம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கூர்ந்து நோக்கும் அறிவைப் பெற வேண்டும்.