பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிக்கல்களை அவிழ்ப்பதற்கு முன்.. நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு, அரேபியா நாட்டில், மன்னன் ஒருவன் வாழ்ந்திருந்தான்்.

அவன் கல்வி கேள்விகளிலும், கற்றறிந்த மேதைகளிலும் வல்லவனாகத் திகழ்ந்திருந்தான்்!

தஞ்சை சரபோஜி மன்னனைப் போல, அறிவை எல்லாத் திக்குகளிலும் அவன் தேடி அலைந்தவன்!

எதிர்கால மக்களுக்கு அறிவைப் பெருநிதியாகச் சேமித்து வைத்து, தனது நாட்டில் தஞ்சை சரஸ்வதி மகாலைப் போன்ற ஒர் அறிவுப் பெட்டகத்தை உருவாக்க ஆர்வம் கொண்டான்!

அதனால், அவனியிலே வாழ்கின்ற மனித இனங்களின் விவரங்களை எல்லாம் வரலாறாக அறிந்து கொள்ள முயன்றான். அறிவு வேட்கை யல்லவா..?

அவையிலே இருந்த அறிவாழமிக்கத் தனது அமைச்சர்களை ஒரு நாள் அழைத்தான்்!

"மேதினியிலே உள்ள எல்லா நாடுகளிலும், ஆங்காங்கே நடைபெறும் சம்பவங்களை எல்லாம் காலவாரியாகத் தொகுத்து எழுதுங்கள்” என்று அவர்களுக்கு கீழ்க்கண்டவாறு கட்டளையிட்டான். "அந்தந்த நாடுகளிலே உள்ள மக்கள் இதற்கு முன்பு எப்படி வாழ்ந்தார்கள்?”

'இப்போது எப்படி வாழ்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?”