பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.சிலப்பதிகாரச் சிக்கலும் ஆர்க்கிமிடிஸ் சிக்கலும்! கிரேக்க நாட்டின் சிசிலித் தீவிலே ஒரு பொற் கொல்லன் வாழ்ந்து வந்தான்் - சிலப்பதிகாரக் காலத்திலே மதுரை மாநகரிலே வாழ்ந்த வஞ்சிப் பத்தனைப் போல!

அந்த நாட்டின் அரசனாக, இரண்டாம் ஐயிரோ என்பவன் ஆட்சி செய்தான்் - சேரன் தம்பி இசைத்த சிலம்பிலே வரும் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனைப் போல!

கோவேந்தன் நெடுஞ்செழியன், தனது மனைவி கோப்பெருந்தேவிக்கு முத்துகளைப் பதித்த காற் சிலம்புகளைச் செய்ய உத்தரவிட்டான் - அரண் மன்ை பொற்கொல்லனுக்கு!

இரண்டாம் ஐயிரோ என்ற சிசிலித் தீவு மன்னன், தனக்கு ஒரு பொன்முடி தேவை அணிந்து கொள்ள, என்று ஆசைப் பட்டான்.

அவன் அரண்மனை பொற்கொல்லனை அழைத்தான்். பொற்கிரீடம் தனக்குத் தேவை என்பதைக் கூறினான். அதற்குத் தேவையான பொன்னையும் கொடுத்து அனுப்பினான்.

பொற்கொல்லன், அரசன் ஆணைக்கு ஏற்ப மிக அரும்பாடுபட்டு சித்திர வேலைப்பாடுகளுடன் பொற்கிரீடத்தைச் செய்தான்்.

சிலப்பதிகாரப் பொற்கொல்லனைவிட, சிசிலித்