பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఖీ விஞ்ஞானச் சிக்கல்கள் தீவுக் கொல்லன் கொஞ்சம் புத்திசாலி என்பது மட்டுமல்ல, ஒரளவு மனசாட்சியும் உடையவனாகக் காசீனப்பட்டான்.

சிலப்பதிகாரப் பொற்கொல்லன், சிலம்பைத் தான்ே திருடிக் கொண்டதும் அல்லாமல், அப்பாவிக் கோவலனைத் திருடனாக்கி, அரசனிடம் அழைத்துச் சென்றான் - கோவலன் தலையைக் கொய்யக் காரணமாய் சாட்சியானான்.

சிசிலித் தீவுப் பொற்கொல்லன், சிலம்பைத் திருடியவனைப் போல் அல்லாமல், சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த பொற் கிரீடத்தைச் * * - .* - - ox "تمي செய்து கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்தான்். பொன்முடி, பளபள என்று பளபளத்தது - தகத் தகவென்று ஒளியுமிழ்ந்தது.

பார்ப்பவர் கண்களை மட்டும் பறிக்கவில்லை - அது மன்னன் மனதையும் கூட மயக்கியது.

காரணம், அவ்வளவு அருமையான சித்திர வேலைப்பாடுகளோடு அந்த பொற்கிரீடம் அமைந்

மன்னன், தான்் ஆசைப்பட்ட பொன் முடி அற்புதமான - அபூர்வமான- அழகே உருவான அருமை வேலைப்பாடுகளுடன் அமைந்த இந்த கிரீடத்தில், நாம் செய்வதற்குக் கொடுத்தனுப்பிய பொன் சரியாக - சமமாக இருக்குமா?

இதுதான்், அந்த வேந்தனுக்கு ஏற்பட்ட சந்தேகம். அரண்மனை அதிகாரிகளை மன்னன் உடனே அழைத்தான்்.