பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி [is தன் கண் முன்னாலேயே அந்தப் பொன் முடிைைய எடை போடுமாறு உத்திரவிட்டான்.

பொற்கொல்லனிடம் அரசன் எவ்வளவு சுத்தமான பொன்னைக் கொடுத்தனுப்பினானோ கிரீடம் செய்ய, அதே எடையில் ஒரு குண்டு மணி அளவு கூடக் குறையாமல் சரியாகவே இருந்தது.

அதிகாரிகளில் சிலர், பொற்கொல்லன் நாணயத்தைப் பாராட்டி மகிழ்ந்தனர். அரசன் அணியல்லவா? அதிலே திருட முடியுமா? என்று சிலர், அரசனிடம் உரிமையோடு அகம்பாவமாகப் பேசினார்கள்.

ஆனால், அரசனுக்கு மட்டுமே தீராத சந்தேகம்! நாம் கொடுத்தனுப்பிய சரியான எடை அளவு பொன், அப்படியே எப்படி பொன் முடியில் சித்திர வேலைப்பாடுகளுடன் திரும்பி வர முடியும்?

பொன்னை அராவி இருக்கமாட்டானா கொல்லன்? இவ்வளவு அருமையான சித்திர வேலைப்பாடுகளைஅற்புதமாகச் செய்திருக்கிறானே! அந்த வேலைப்பாடுகளுக்காக பொன்னை அராவியிருப்பானே!

அதனால், பொன் சேதமாயிருக்க வேண்டுமே! என்றெல்லாம் அரசன் சிந்தித்தான்்.

இந்த பொன்முடியில், குன்றின் மணியளவு பொன் கூடக் குறையவில்லை என்றால், என்ன காரணமாக இருக்கும் என்று யோசித்தான்்?

பொன்முடியைப் பலவாறு திருப்பி திருப்பி நோட்டமிட்டவாறு இருந்தான்் மன்னன்.