பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5G誓 விஞ்ஞானச் சிக்கல்கள்

எப்படிச் சிந்தித்தாலும் இறுதியிலே அவனுக்கு ஒரு முடிவுதான்் உறுதியாகத் தென்பட்டது. அதாவது, தான்் கொடுத்த பொன்னோடு சிறிது வெள்ளியைக் கலந்து பொற்கொல்லன் தன்னை ஏமாற்றி அக்கிரமமாக லாபம் சம்பாதித்து இருக்கிறான் என்பதே மன்னனின் முடிவு.

இந்தச் சந்தேகத்தை எப்படித் தீர்த்துக் கொள்வது? யாரைக் கொண்டு உண்மையைக் கண்டு பிடிப்பது? உள்ளதை உணராமல் ஒருவன் மீது குற்றம் சுமத்துவது குற்றமாயிற்றே? என்று, சிசிலித்தீவு அரசன் சிந்தித்தபடியே இருந்தான்்!

இந்த மன்னன் என்ன பாண்டியன் நெடுஞ் செழியனா? உண்மையினை உணராமலே, உணரக் கூட ஒர் ஆழ்ந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளாமலே, பொற்கொல்லன் பேச்சைக் கேட்டு நிரபராதி கோவலனைக் குற்றவாளியாக்கிக் கொலை தண்டனை வழங்கிட?

அது போன்ற ஒரு வரலாற்றுப் பழி ஏதும் தன் மீது வந்துவிடக் கூடாதே என்ற முன் எச்சரிக்கையோடு, இரண்டாம் ஐயிரோ - பொற் கொல்லன் உருவாக்கிய சிக்கலைப் பற்றி சிந்தித்த படியே இருந்தான்்.

அக் காலத்தில் அலெக்சாண்டிரியா நகரில் புகழ் பெற்றக் கணிதக் கல்வி நிலையம் ஒன்று இருந்தது. கிரேக்கக் கணித மேதை யூக்லிட் என்பவரின் மாணவரும், புகழ்பெற்ற வித்தகராகவும் விளங்கிய சீரான் என்பவர், அந்தக் கணிதக் கல்வி நிலையத்தின் பேராசிரியராக இருந்தார்.