பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 口57

அந்தக் கல்வி நிலையத்தில், மற்ற நாடுகளிலே இருந்து கற்க வந்த பலர், கணிதம், வானநூல், தத்துவம் போன்ற கல்வியைக் கற்றுத் தேர்ச்சிப் பெற்று வந்தனர்.

அத்தகைய மாணவர்களிலே ஒருவராக ஃபைடியாஸ் என்ற கிரேக்க வான நூல் நிபுணரின் மகனான, சிந்தனையாளர் ஆர்க்கிமிடீஸ் என்பவரும் கல்விக் கற்று வந்தார்.

அவர் கணிதத் துறையில் மிகச் சிறந்த மாணவ ராக விளங்கி வருவதை அறிந்த இரண்டாம் ஐயிரோ மன்னன், ஆர்க்கிமிடீசை அழைத்தான்்.

தனது பொற்கிரீட சந்தேகத்தை அவரிடம் வேந்தன் கூறினான்.

அழிசனின் ஐயம் நியாயமானதே என்று ஆர்க்கி மிடீசும் சம்மதம் தெரிவித்தார்.

அறிவியல் அரசனும் - அவனி ஆள்வோனும் பொன்முடிச் சிக்கலைப் பற்றி நீண்ட நேரமாக உரையாடினர்.

சிலப்பதிகார நெடுஞ்செழியன், தனது மனைவி யின் காற்சிலம்பு பற்றி எழுந்த பிரச்சினையில், இவ்வாறு ஒர் ஆலோசனையை அரசவையில் நீதி வரம்பு ஒழுங்கிற்கேற்ப செய்தான்ா?

செய்திருந்தால் சிலப்பதிகாரக் கதைக்கே இடமில்லாமல் போயிருக்குமே!

மன்னனைப் போல் புகாரில் வாழ்ந்த கோவலனும் மாண்டிருக்கமாட்டான் அல்லவா?