பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ጻ፫ኽ விஞ்ஞானச் சிக்கல்கள்.

பாண்டியனான பார்வேந்தனும், தனது உயிரைப் பாதியிலேயே இழந்திருக்க மாட்டானே!

பொலிவான மதுரை நகரமும் நெருப்பிலே பொசுங்கியிருக்காதே!

சாதாரண ஒரு கண்ணகிப் பெண், பத்தினி தெய்வமாக மாறிடும் சூழ்நிலையும் அமைந்திருக்காது அல்லவா?

இதில் குறிப்பிடத்தக்க சூழ்நிலை என்ன வென்றால், இரண்டாம் ஐயிரோ தனது சிக்கலைப் பற்றி விவாதித்தது அரசவையிலே அல்ல, அரண்மனையிலே என்பதைக் கவனத்திலே கொள்ள வேண்டும்.

அப்படி இருந்தும், ஒர் உண்மையைக் கண்டுபிடிக்க, அரசனும் - அறிவியல் மேதையும் கலந்துரையாடி, தங்களுக்குள்ளே ஒரு திட்ட வட்டமான முடிவுக்கு வந்தனர் என்பதே குறிப்பிடத் தக்க சூழ்நிலையாகும்.

சிலப்பதிகாரப் பாண்டிய மன்னன் நெடுஞ் செழியன், கோவலன் திருடனா - இல்லையா என்பதைக் கண்டறிய, தனது அமைச்சர்களையோ கற்றறிந்த புலவர்களையோ, கலந்தோ கேட்டோ தீர்ப்பளிக்கவில்லை.

பொற் கொல்லன் சொன்னதே வேதவாக்கு என்று வேந்தன் நம்பினான்.

அதன் எதிரொலிதான்், கோவலன் தலை கொய்யப்பட்ட சம்பவமாகும். இரண்டாம் ஐயிரோ அவ்வித எதிர்கால பழிக்கோ அல்லது அவசர