பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி }

முடிவுக்கோ அல்லது அதிகார சுக போதைக்கோ இடம் கொடுக்க வில்லை.

பொன் முடியின் திருட்டுச் சிக்கலை கண்டு பிடிக்க கற்றறிந்த மேதைகளை மன்னன் நாடினான்.

அதுவும், கணிதக் கலை மேதையினை அழைத்திட, குறிப்பாகக் கணிதக் கல்வி நிலையத்துக்கே மன்னன் அழைப்பை அனுப்பினான்.

அந்த நேரத்தில் யார் கணிதத் துறை நிபுணர் என்பதை அறிந்தான்்.

அவர்களின் ஆலோசனையை நாடி அழைப்பு விடுத்துக் கலந்துரையாடி உண்மையைக் கண்டுபிடித்தான்்.

ஒர் நாள் அரசனும் - ஆர்க்கிமிடீசும் உரையாடிக் கொண்டிருக்கும் போது, அரசன் ஆர்க்கிமிடீலை நோக்கி, பல்வேறு வகைப் பொருள்களின் பல்வேறு வகை எடை எப்படி இருக்கும் என்பதை அறிவேன்.

'பொன்னால் செய்த ஒரு கன சதுரம், அதே அளவுள்ள வேறு ஒரு வெள்ளி கன சதுரத்தை விட, வடிவமாக வார்த்து நிறுத்துப் பார்த்தால், எவ்வளவு பொன்னை பொற்கொல்லன் திருடி இருப்பான் என்பதும் தெரிந்துவிடும்.”

அதே கன அளவுள்ள அந்தப் பொன்னின் பளுவை, அதன் கனம் குறைவாக இருந்தால் அந்த முடியைச் செய்த கொல்லன், நான் கொடுத்த பொன்னைத் திருடிக் கொண்டு, அதற்குச் சமமான வெள்ளியைக் கலந்திருக்க வேண்டும்.

உரிய வழியிலே நான் நடவடிக்கை எடுக்கச் செய்தால், அருமையான சித்திர வேலைப்பாடுகளால்