பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}] விஞ்ஞானச் சிக்கல்கள் அமைந்த இந்த பொன் முடி வீணாகப் போய்விடும் அல்லவா?

'எனவே, கிரீடமும் அழியக்கூடாது. அதிலே உள்ள பொன்னும் தூயதா? சரியளவா என்று அறிய வேண்டும்.

ஒரு வேளை, கொல்லன் அதில் கலப்படம் செய் திருந்தால் எவ்வளவு கலந்திருப்பான் என்பதும் தெரிய வேண்டும்.

இதற்கு என்ன வழி என்பதை ஆராய்ந்து, நீங்கள் தான்் கூறவேண்டும் என்று மன்னன் ஆர்க்கிமிடீ சிடம் கேட்டுக் கொண்டான்.

கணிதத் துறையிலே - காவலனுக்கும் கணிசமான அறிவு உண்டு எனபதைக் கற்றறிந்த கணித மேதையிடமே அரசன் விளக்கிக் கூறினான்.

ஆனால், கிரீடம் அழியாமல் உண்மை புலப்படும் வழியைக் கணித மேதையைக் கூறுமாறு மன்னன் வேண்டிக் கொண்டான்.

தமிழ் மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனிடம், இந்த தீர்க்கமான யோசனை எழுந்ததா? இல்லையே, ஏன்?

பொற்கொல்லன் வஞ்சிப்பத்தன், அரசனிடம் தான்் மட்டுமே தனித்துச் சென்று, அதுவும் அரண்மனை அந்தப்புரத்திற்கே சென்று சந்தித்தான்். அரசனின் அந்தப்புர பலவீனத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட பொற்கொல்லன், கோவலனைத் திருடனாக்கி விட்டான்.

அரசன், அதைத் தீர்க்கமாகச் சிந்திக்காமல்