பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 芭6笃

தொட்டி நீரின் அளவும் உயர்ந்து, உயர்ந்து காணப்பட்டது.

ஒழுங்கான கன வடிவம் இல்லாத ஒரு பொருளின் கன அளவை அளந்து கணக்கிட வழிஇதுதான்் என்பதைக் கண்டறிந்தார்.

ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீரை நிரப்பினார். அரசன் தந்த பொற்கிரீடத்தை அதனுள்ளே மிக எச்சரிக்கையாகத் தொங்க விட்டார்.

அவ்வாறு தொங்க விட்டதனால் பாத்திரத்திலே இருந்து வெளியே வழிந்த நீரை, வேறொருப் பாத்திரத்திலே ஏந்திப் பிடித்தார்.

வழிந்த தண்ணிரின் அளவே பொன்முடியின் கன அளவு என்று, ஆர்க்கிபீடிஸ் கணக்கிட்டு கண்டார்.

வழிந்த அந்த தண்ணிரின் கன அளவுக்கு ஈடான பொன்னைத் திரட்டி, அதன் எடையினைக் கிரீடத் தின் எடையோடு நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தார்.

அப்படிப் பார்த்த போதுதான்், அந்த பொற் கொல்லன் செய்த கலப்படம் குற்றத்தைக் கண்டு, ஆர்க்கிமிடீஸ் மன்னனிடம் சென்று செய்து காட்டி ଶ୪tytff.

அதனால், பொற்கொல்லன் சூழ்ச்சி அனைவருக்கும் அம்பலமாகி விட்டது. எல்லோரும் பரபரப்புடன் அதைச் சோதித்து அறிந்தனர். அரண்மனை வருவாயிலே வாழ்ந்து கொண்டு வந்த பொற்கொல்லன், அரசுக்கே துரோகமிழைத்த அக்ரமத் திருட்டுச் செயலைக் கண்டு வேந்தன் கொதித்தான்்.