பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது ; விஞ்ஞானச் சிக்கல்கள்

பொற்கொல்லனுக்கு மரண தண்டனையை விதித்தான்். அவன் மனக் கொதிப்பும் அடங்கியது.

கிரேக்க நாட்டிலே ஒரு பொற்கொல்லன் பொன்னிலே வெள்ளியைக் கலந்த திருட்டுக் குற்றத்துக்காக பாவம் மரண தண்டனையை பெற்றுக் கொண்டான்.

சிலப்பதிகாரப் பொற்கொல்லன், அரசியின் காற் சிலம்பை தான்் கவர்ந்து கொண்டதும் அல்லாமல் நிரபராதியான கோவலனைக் கொன்றிடக் கர்ரணமாகவும் இருந்தான்்.

கிரேக்க நாட்டு பொற்கொல்லனும் திருடினான். தமிழகத்துப் பொற்கொல்லனும் திருடினான். இரண்டு பொற்கொல்லர்களுமே திருடர்கள்தான்்.

ஆனால், ஒரு பொற் கொல்லனுடைய திருட்டு, ஒரு விஞ்ஞானியின் ஆராய்ச்சியைத் தூண்டியது. கிரேக்க நாட்டுப் பொற் கொல்லனின் திருட்டுச் செயல், ஒர் அறிவியல் சிந்தனையாளனுக்கு மிகப் பெரிய சிக்கலையே உருவாக்கிவிட்டது.

அந்த சிக்கல்தான்், 'அடர்த்தி எண்' என்ற ஆர்க்கிமிடீஸ் தத்துவத்தை, உலகக் கணிதத் துறைக்கே உருவாக்கித் தந்தது.

அந்த அடர்த்தி எண் என்ற சூத்திரத்தைத் தான்், விஞ்ஞானம் கற்கும் மாணவர்கள், இன்றும் படித்துப் பயன் பெறுகிறார்கள்.

அந்தப் பொற்கொல்லன் எழுப்பிய சிக்கலின் விளைவால், ஒரு பெரிய கணித உண்மையையே உலகம் பெற்றுவிட்டது. என்ன அந்த விளைவு?