பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ó65 'ஒரு பொருளின் கன அளவை, அதற்குச் சமமான கன அளவுள்ள தண்ணிரோடு ஒப்பிடத் தொடங்கினார்கள். அந்த விகிதத்தையே 'அடர்த்தி எண் என்று, இன்றும் அழைக்கிறது விஞ்ஞான உலகம்’

பொன்னின் அடர்த்தி எண் முப்பது என்று வைத்துக் கொள்வோம். அதாவது, ஒரு பைண்ட் பொன்னின் எடை, சுமார் முப்பது பவுண்டாக இருக்கும். அது போலவே, ஒரு பைண்ட் வெள்ளியின் எடை சுமார் பதினைந்து பவுண்டாக இருக்கும் என்று கணக்கிட்டு கண்டார் ஆர்க்கிமிடீஸ்.

பொற் கிரீடம் தண்ணிரில் மிதந்த காட்சியிலே இருந்து கண்டு பிடித்தது தான்் "மிதப்புத் தத்துவம்' என்ற கணிதக் கோட்பாடு.

அந்த பொன் முடியை அளந்த கணக்கோடுமிதப்புத் தத்துவம் மிக நெருங்கிய சம்பந்தம் உடையதாகும்.

நீராடும் தொட்டியிலே இருந்த நீர், ஆர்க்கிமிடீஸ் குளிக்கும்போது, அவரது உடலைத் துரக்கிப் பிடிப்பது போல - அவருக்குத் தோன்றியிருக்கக் கூடும்.

அதே நேரத்தில், தண்ணிரில் தாம் மிதப்பது போன்ற உணர்ச்சி அவருக்குத் தெரிந்திருக்கக் கூடும். மரம் போன்ற சில பொருட்கள் தண்ணிரில் மூழ்குவதில்லை என்பதையும் அவர் பார்த்திருக் கக் கூடும்.

அதே நேரத்தில், வேறு சில பொருட்களை தண்ணிரில் துரக்கிப் பிடித்து, மிதக்கிறதா என்றும் ஆர்க்கிமிடீஸ் சிந்தித்திருக்கக் கூடும்.