பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿喜 விஞ்ஞானச் சிக்கல்கள்

இவை போன்ற விவரங்களை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்த்த பிறகுதான்், அவரால் ஒர் உறுதியான முடிவுக்கு வர முடிந்தது.

'திரவத்தின் உள்ளே மூழ்கிய ஒவ்வொரு பொருளும், எந்த அளவுள்ள திரவத்தை வெளியே தள்ளிவிட்டு அதனிடத்தில் மூழ்கி மிதக்கின்றதோ, அந்த அளவுள்ள திரவத்தின் எடைக்குச் சமமான விசையோடு அது உயரத் துரக்கப்படுகிறது” என்ற அரிய கணக்கியல் தத்துவத்தை ஆர்க்கிமிடீஸ் விஞ்ஞான உலகுக்கு அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து வழங்கினார்.

மேற்கண்ட அரிய விஞ்ஞான விதி உருவாகிட கிரேக்க நாட்டுப் பொற்கொல்லனின் ஒரு திருட்டுச் செயல், காரணமாக அமைந்தது.

பாவம் அந்த கொல்லன், மன்னனால் கொலை செய்யப்பட்டான். ஆனால், உலகில் அது இன்றும் வாழ்ந்து வருகின்றது. ஒர் அரிய கணித சூத்திரம், அவனால், அவனது திருட்டுச் செயலால் விளைந்த விளைவாக இருக்கிறதே என்பதை நோக்கு கின்றபோது, அந்த பொற்கொல்லன் மீது விஞ்ஞான உலகமும் கணிதத் துறையும் கண்ணிர் அனுதாபத்தைக் காட்டி வாழ்வதைப் பார்க்கிறோம். சிலப்பதிகாரப் பொற்கொல்லனுடைய திருட்டுச் செயல், பொற்கொல்லர் குலத்துக்கே தீராத களங் கத்தை உருவாக்கி விட்டது அல்லவா?

மன்னன் நெடுஞ்செழியன் அந்தப்புரம் செல்கிறான். அப்போது பொற்கொல்லன் அரசனைச் சந்திக்கிறான்.