பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ó敌

கோவலன் அரசியின் காற்சிலம்பைத்

திருடிவிட்டான் என்று கோவேந்தனிடம் நயமாக, தந்திரமாகக் கூறுகிறான் கொல்லன்.

அவன் கூறியதை அப்படியே நம்பி ஏற்ற அரசன் நெடுஞ்செழியன், கொண்டு வா அந்த கோவலனை என்று கூறவேண்டியவன் 'கொன்று வா அந்த கோவலனை என்று ஆணை இடுகிறான்.

அரசன் நம்பிக்கையைப் பெறுமளவுக்கு அந்த அரண்மனையின் செல்வாக்கு பொற்கொல்லனுக்கு இருந்ததால், கோவலன் மரணதண்டனைப் பெற்றிடும் சூழ்நிலை ஏற்பட்டது.

கோவலன் குற்றமற்றவன் என்பதைக் கூடல் மாநகர்-கோ, புரிந்து கொண்ட பிறகு 'பொன் செய் கொல்லன்தன் சொல் கேட்ட யானோ அரசன்யானே கள்வன். கெடுக என் ஆயுள்'என்று கூறி அரியணையிலே இருந்து வீழ்ந்து அநீதிக்காக உயிர்த் தியாகம் செய்து கொண்டான் மன்னன்

நெடுஞ்செழியன்!

கிரேக்க நாட்டுப்_பொற்கொல்லனை, அந்நாட்டு மன்னன் திருட்டுக் குற்றம் சாட்டி மரண தண்டனையைத் தந்து கொன்றான்.

தமிழ் நாட்டுப் பொற்கொல்லனோ - தவறுதலாக பாண்டிய மன்னனது கோலையே வளைத்து அரசனையை மரணமடையச் செய்தான்்.

மன்னன் நெடுஞ்செழியன் மாண்டதைக் கண்ட மன்னி கோப்பெருந்தேவி, மன்னனின் மார்பு மீதே சாய்ந்து அக் கணமே பிணமானாள்!