பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鑫導 விஞ்ஞானச் சிக்கல்கள்

கண்ணகி, அப்போதும் சீற்றம் தணியாதவளாய் கணவனைக் கொன்ற ஆட்சியை அழித்தாள்! மதுரையை எரித்தாள்! அதன் விளைவால் அழிந்தவை எவ்வளவோ..! என்னென்னவோ..!

இவ்வளவு அழிவுக்குப் பிறகும், ஆலவாய் நகர் மழை வளம் குறைந்து, வறுமை எய்தியது. வெப்ப நோயும் அதன் குருரமும் நகரைத் தொடர்ந்தது.

பாண்டிய மன்னன் உயிர்த் தியாகம் செய்து பன்னிரண்டாண்டுகளான பிறகும், பாண்டிய நாட்டின் நிலை ஒரு பொற்கொல்லன் திருட்டுத் தனத்தால், பொய்யால் இவ்வாறு ஆனது என்ற பழி மதுரிைக்குப் படரலாயிற்று.

மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியனின் மகனான வெற்றிவேற் செழியன் என்ற மன்னன், கண்ணகி தெய்வத்தின் சீற்றத்தைத் தணிப்பதற்காக ஆயிரம் பொற்கொல்லரைக் கொன்று கள வேள்வி செய்தான்் என்பது வரலாறாகும்.

கிரேக்க நாட்டுப் பொற்கொல்லனின் திருட்டு, ஒர் அற்புதமான விஞ்ஞானச் சூத்திரத்தை உலகுக்கு வழங்கிடிக் காரணமாயிருந்தது.

அந்த விதியால், இன்றைய கணித உலகமும் - விஞ்ஞான உலகமும், மகத்தான் சாதனைகளைக் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது.

சிலப்பதிகாரப் பொற்கொல்லனுடைய திருட்டால் பொய்யால் - சீரும் சிறப்புமாக வாழ்ந்த மாமன்னன் ஒருவனும் அவனது தேவியும் பிணமாகும் சூழ்நிலை உருவானது.