பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி | ஒ மதுரை மாநகர் எரிந்தது. மக்களும் மற்ற உயிர்களும் மாண்டொழிந்திடும் நிலை ஏற்பட்டது. ஆயிரம் பொற்கொல்லர்கள் உயிரோடு கொல்லப்பட்ட கொடும் பாதகச் சூழ்நிலையை உருவாக்கியது.

சிலப்பதிகாரப் பொற்கொல்லன் செய்த திருட்டுச் செயலால், பொற்கொல்லர் மரபுக்கே தீராத பழியும். இழிவும் ஏற்பட்டு விட்டது சமுதாயத்தில்! பாண்டியன் மரபுக்கே மாசு சூழ்ந்தது.

கிரேக்க நாட்டுப் பொற்கொல்லனுக்கும்சிலப்பதிகாரப் பொற்கொல்லனுக்கும் இடையே, ஏறக் குறைய 350 ஆண்டுகள் உருண்டோடி ଞ୍ଚ_ଣfଣୀ?6୪t.

இருந்தாலும், இரு பொற்கொல்லரிடையே சூழ்ந்துள்ள அடிப்படைச் சம்பவங்கள் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன.

இரண்டு பொற்கொல்லர்களும் திருட்டுச் செயலையே செய்துள்ளார்கள்.

என்றாலும், அந்த திருட்டுகளால் உலகுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகளையே நாம் இங்கே சுட்டிக் காட்டியுள்ளோம்.

கிரேக்க நாட்டு பொற்கொல்லனின் திருட்டுச் செயல், விஞ்ஞான உலகத்தையும் - கணித உலகத் தையும் இன்றும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. சிலப்பதிகாரத் திருட்டுச் செயல், இலக்கியத் துறையிலே, வாதப் பிரதிவாதங்களை எழுப்பி, காப்பிய உலகத்தையே திணறடித்துக் கொண் டிருக்கிறது.