பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மகாபாரதம் சிக்கலும் o

நியூட்டன் சிக்கலும் !

இந்தியாவின் விர காவியங்களில் ஒன்றாக விளங்கி வரும் மகா பாரதம் ஒரு பழம் பெரும் சிக்கலை உருவாக்கி, அக்கால சமுதாயம், நாகரீகம், பண்பாடு ஆகியவற்றினை விளக்கிக் கொண்டிருக் கிறது.

பாண்டு மன்னனின் புத்திரர்களான பஞ்ச பாண்டவர்கள் ஐவருக்கும், தர்ம பத்தினியாகத் திகழ்ந்தவள் திரெளபதி.

அந்த பெண்ணரசியும் - பஞ்ச பாண்டவர்களும் ஒரு நாள் மகிழ்ச்சியாக நந்தவனத்தில் ஆடிப் பாடிக் கொண்டிருந்தார்கள்.

அய்வருக்கும் பத்தினி, அழியாத பாஞ்சாலி, என்று அத்தை குந்தி தேவியால் பகிர்ந்தளிக்கப்பட்ட திரெளபதை, அடக்கமாக, அன்பாக, கணவர் அய்வருக்கும் உரிய பணிவிடைகளைத் தவறாமல் செய்து கொண்டு வாழ்கிறாள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றாக உணவு உண்டு கொண்டிருந்த ஒரு நேரத்தில், கிருஷ்ண பரமாத்மா திடீரென அங்கு வந்தார்.

எதிர்பாராமல் வருகை தந்துள்ள அண்ணனை §6) தி ଚ୍ଯ - த்ே 岛 - 4. த0)ாளபதி இன முகத்தோடு உபசாததாள்.

மைத்துனர்களான பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் எழுந்து கைகூப்பி நின்றனர்.