பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 岱7露 விருந்தினராக வந்த பக்தவத்சலனுக்கும் அமுது படைக்கப் பட்டது.

அனைவரும் உண்டு மகிழ்ந்த பின், அவர்கள் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்து உரையாடியபடியே இருந்தனர்.

அப்போது, ஒரு பழம் மரத்திலே இருந்து கண்ணன் காலடி ஒரமாக விழுந்தது. பாஞ்சாலி அதை எடுத்துக் கண்ணனிடம் தந்தாள்.

கிருட்டினன் அந்தக் கனியைப் பெற்றுக் கொண்டு கையிலே அதை உருட்டியபடியே சிந்தித்தார்.

பஞ்ச பாண்டவர்களைப் பார்த்து, இந்தப் பழம் மரத்திலே இருந்து ஏன் கீழே விழுந்தது என்று கேட்டார் கிருஷ்ணன். மதுசூதனன் கூறும் மர்மத்தை அறியாத பாண்டவர்கள், எங்களுக்குத் தெரியாது பிரபோ என்று ஒருமித்தக் குரலோடு கூறினர்.

இந்தப் பழம் மீண்டும் போய் மரத்திலே, விழுந்த இடத்திலேயே ஒட்ட வேண்டுமானால் ஒரு நிபந்தனை என்றார் பரந்தாமன்.

'துவாரகை மன்னா! என்ன நிபந்தனை அது? தெரிவித்தால், அதைச் செய்து முடிக்கிறோம்” என்று அனைவருமே எதிரொலித்தார்கள்.

மைத்துனர்களே! உங்களுடைய வார்த்தையை கேட்கும் அளவிற்கு அது அவ்வளவு சுலபமல்ல. சாதாரணம்! மிக மிகச் சாதாரணமானதுதான்் என்றார் சடகோபன்.

"வேறொன்றுமில்லை. நீங்கள் அறுவரும் இன்று